அவிநாசி: அவிநாசி அருகே கல்லூரி மாணவிகள் இருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள் மோனிகா (19). அவந்திகா (19), இருவரும் தனியார் கல்லூரியில் ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வந்தனர். இருவரும் பல்பொருள் அங்காடி ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வந்ததாக தெரிகிறது . இந்நிலையில் மோனிகா நேற்றைய தினம் (10/12/2024) மாலை தனது தோழி அவந்திகா வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில், மோனிகா தனது அறைக்குள் சென்றதாகவும் சென்ற பின், நீண்ட நேரமாகியும் அவந்திகா தனது அறையின் கதவை திறக்காததால், அருகில் இருந்தவர் சந்தேகமடைந்து பார்த்தபோது, இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
போலீஸ் விசாரணை
இதையும் படியுங்கள் : சென்னை விமான நிலையத்தில் 13 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து..!
போலீசார் விசாரணையில், “அவந்திகாவும் மோனிகாவும் மிகவும் நட்பாக இருந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர். படிக்கும் போது ஒன்றாகப் படித்தார்கள். ஆனால், ஒன்றாகப் படித்தால் சரியாகப் படிக்காது, தனித்தனியாகப் படிக்க வேண்டும் என்று பெற்றோர் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், பெற்றோர்கள் நட்பை முறித்துவிடுமோ என்ற பயத்தில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்” என்றார். இதையடுத்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று (டிச.11) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துரையிடுக
0கருத்துகள்