TASMAC கட்டாய ரசீது மதுபான விற்பனைக்கு வழங்க வேண்டும் டாஸ்மாக் நிர்வாகம் ..

Theechudar - தீச்சுடர்
By -
0

TASMAC சென்னை: பாட்டிலை முன்கூட்டியே ஸ்கேன் செய்ய வேண்டாம் என்றும், மது விற்பனை செய்ததற்கான ரசீது வழங்கவும் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. .

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தற்போது கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது ராமநாதபுரம், அரக்கோணம், காஞ்சிபுரம் (வடக்கு), காஞ்சிபுரம் (தெற்கு), கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், விற்பனையாளர்கள் முறையான நடைமுறைகளை பின்பற்றாமல், முறைகேடுகளில் ஈடுபடுவதாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது

இதையும் படியுங்கள் : அன்னை சோனியா காந்தி க்கு 78.வது பிறந்தநாள் விழா ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டது.

TASMAC கணினிமயமாக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளின் விற்பனை அறிக்கைக்கும், சில மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து குறுஞ்செய்தி மூலம் பெறப்பட்ட விற்பனை விவரங்களுக்கும், மொபைல் சாதனங்கள் மூலம் பெறப்பட்ட விற்பனை விவரங்களுக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு உள்ளது. இதை தடுக்க டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மதுபானத்துடன் ரசீது வழங்க வேண்டும். மதுபானம் விற்கும் போது மட்டுமே பாட்டிலை ஸ்கேன் செய்ய வேண்டும். மதுபானங்களை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்கக் கூடாது.

இதன் காரணமாக, விற்பனை மற்றும் சரக்கு இடையே வேறுபாடு உள்ளது. இதை கடைக்காரர்கள் சரி செய்ய வேண்டும். தவறுகளை கண்காணிக்க தவறினால், சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் இதற்கு முழுப் பொறுப்பாவார்கள். அவர்கள் மீது உரிய துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)