பாகிஸ்தானை சேர்ந்த 1) ரவீந்திர குமார் (இடது)
ஃபிரோசாபாத் (உ.பி) ஹஸ்ரத்பூர் ஆயுதத் தொழிற்சாலையில் சார்ஜ் மேனாகப் பணி புரிந்து வந்த ரவீந்திர குமார் பாதுகாப்புத் தொடர்புடைய திட்ட ரகசியங்களின் ஆவணங்களை நேஹா சர்மா என்ற பெண்ணிற்கு அனுப்பி வந்தது தெரிய வந்ததால் கைது செய்யப்பட்டார்.
நேஹா சர்மா பாகிஸ்தான் உளவு அமைப் பான ஐ.எஸ்.ஐ. யுடன் தொடர்புள்ளவராக இருக்கக் கூடும். அது பற்றி விசாரித்து வருகின்றனர்.
2) குமார் விகாஸ் (வலது)
கான்பூர் (உ.பி) ஆயதத் தொழிற் சாலை யில் ஜூனியர் ஒர்க்ஸ் மேனேஜராக பணியாற்றி வந்த குமார் விகாஸ் என்பவர் இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யுடன் தொடர்புடைய நபருக்கு அனுப்பி வந்தது தெரிய வந்ததால் கைது செய்யப்பட்டார்.
மேற்கண்ட இருவரும் சமூக ஊடகங் களான ஃபேஸ் புக், வாட்ஸ் ஆஃப் வழியாக நட்பு ஏற்பட்டவர்களுக்கு இந்தத் தகவல் களை அளித்து வந்துள்ளனர். நேரில் சந்தித்ததில்லை.
நேஹா சர்மா என்பவர் உண்மையிலேயே பெண்ணா? அல்லது உளவாளியின் மாற்றுப் பெயரா?
நேஹா சர்மா என்ற பெண்ணின் பெயரில் விரிக்கப்பட்ட வலையில் அகப்பட்டு கொண்டு தேசத்திற்கு த்ரோகம் செய்யத் துணிந்து விட்டனர்.
ரவீந்திர குமார், குமார் விகாஸ் ஆகிய இருவரையும் உத்திரப்பிரதேச பயங்கர வாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர்.
கருத்துரையிடுக
0கருத்துகள்