தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், வஉசி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முருகன் (37), கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு ஆஸ்துமா நோய் இருந்ததாக தெரிகிறது. மேலும் மது பழக்கமும் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி வேலைக்கு செல்லாததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாயார் வீட்டுக்கு சென்று விடுவாராம்.
இதனால் மன வேதனை அடைந்த முருகன் ஏற்கனவே மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்தும் பிழைத்து கொண்டாராம். இந்நிலையில், இன்று மதியம் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் முருகன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கருத்துரையிடுக
0கருத்துகள்