கொரோனா பீதி

123
By -
0

நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா சிகிச்சை

       கட்டுக்குள் உள்ளது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 257 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

“கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்போதைய சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது”

தமிழகத்தில் கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு

தமிழ்நாட்டில் மே 12-19 வரையிலான ஒரு வாரத்தில் கோவிட்-19 தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32-லிருந்து 66 ஆக அதிகரித்துள்ளது. மே 12-ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது மே 19 ஆம் தேதி கோவிட்-19 தொற்று எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம் தற்போதை கொரோனா தொற்று தீவிரத் தன்மை கொண்டதில்லை. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. கவலைப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 34 தொற்றுகள் அதிகரித்துள்ளன. அதாவது மே 12 ஆம் தேதி 32 ஆக இருந்த கோவிட்-19 தொற்று எண்ணிக்கை மே 19 ஆம் தேதி 66 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் மே 12 முதல் 19 வரை தமிழகம் முழுவதும் மொத்தம் 32 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்த வாரம், கேரளாவில் அதிகபட்சமாக 95 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அந்த வகையில் மொத்தம் 69 தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மகாராஷ்டிராவில், தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 12-ல் இருந்து அதிகரித்து 56 ஆக உயர்ந்துள்ளது.

முந்தைய வாரத்தின் 93 தொற்று பாதிப்புகளை ஒப்பிடும்போது, திங்கட்கிழமை நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 164 அதிகரித்து 257 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது. முந்தைய வாரத்தில், தமிழ்நாடு நாட்டிலேயே அதிகபட்சமாகவும், புதுச்சேரி மூன்றாவது இடத்திலும் இருந்தது. இந்த வாரம் புதுச்சேரியில் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, மேலும் எண்ணிக்கை 13 லிருந்து 10 ஆகக் குறைந்துள்ளது.

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)