சேலத்தில் 100 அரசு செவிலியர் பணியிடங்கள்! மாதம் ரூ.21,000 சம்பளம் – டிசம்பர் 4 கடைசி நாள்!
100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் தேசிய சுகாதார இயக்கம் மூலம் 100 ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பள விவரம்
- 82 பணியிடங்களுக்கு மாதம் ரூ.21,000.
- 18 பணியிடங்களுக்கு மாதம் ரூ.18,000 மற்றும் ரூ.1,950 EPF.

கல்வித் தகுதி
GNM அல்லது B.Sc Nursing படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவத்தை சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
கடைசி நாள்: 04.12.2026 மாலை 5 மணி.
குறிப்பு: இப்பணியிடங்கள் நிரந்தர அரசு வேலை அல்ல; ஒப்பந்த அடிப்படையிலானவை.












