Karthigai Deepam 2024 : கார்த்திகை தீபம் விளக்கு ஏற்றும் நேரம் எப்போது?எந்த திசையில் வைக்கவேண்டும் ? தீபம் ஏற்ற எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?

Theechudar - தீச்சுடர்
By -
0

கார்த்திகை தீபம்  2024: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும், எந்தெண்ணெய் பயன்படுத்த வேண்டும், எந்த திசையில் ஏற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கார்த்திகை தீபம் 2024: தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் சிறப்பு மாதமாகக் கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் வரும் நன்னாளில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பல்வேறு கோவில்களில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். இதேபோல், கார்த்திகை தீபத் திருவிழா பல்வேறு கோயில்களில் சிறிய தீபங்கள் ஏற்றுவது, கோயில்களில் மலையில் தீபம் ஏற்றுவது என பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது.

வீட்டில் தீபம் ஏற்ற சரியான நேரம் எது?

மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதன் பிறகு நம் இல்லங்களில் தீபம் ஏற்றுவது நன்மை தரும். திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சியளிக்கும் சிவபெருமான் நம் இல்லங்களிலும் ஜோதி வடிவில் காட்சியளிக்கிறார் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

Pin page

எப்படி விளக்கு ஏற்றுவது ?

மற்ற நாட்களில் நம் வீடுகளில் பலவித திரிகளால் தீபம் ஏற்றினாலும், திருக்கார்த்திகை தீப நாளில் வாழைத்தண்டு திரி, தாமரை தண்டு திரி அல்லது தூய பஞ்சு திரி ஆகியவற்றை கொண்டு தீபம் ஏற்றுவது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. தாமரை, வாழைத்தண்டு திரி இல்லாதவர்கள் சுத்தமான பஞ்சு திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றலாம்.

 

தீபம் ஏற்ற எந்த எண்ணெய் பயன்படுத்த வேண்டும் ?

பசு நெய்யில் தீபம் ஏற்றினால் – நிம்மதியான வளமான வாழ்வு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் – செல்வச் செழிப்பு உண்டாகும். விளக்கெண்ணெய் தீபம் ஏற்றினால் புகழ், வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும். எண்ணெய்யில் தீபம் ஏற்றினால் – குலதெய்வத்தின் அருள், இலுப்பை எண்ணையில் தீபம் ஏற்றினால் – செல்வம் பெருகும், வீட்டில் அமைதி நிலவும்.

எத்தனை விளக்குகளை ஏற்ற வேண்டும்? எவ்வளவு நேரம் ஒளிர வேண்டும்?

இன்று, சந்தையில் பல்வேறு விளக்குகள் கிடைக்கின்றன. ஆனால் கார்த்திகை தீபத்தன்று கையால் செய்யப்பட்ட அகல் விளக்கைப் பயன்படுத்தி தீபம் ஏற்றுவது பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. எனவே குறைந்தது 3 அகல் விளக்குகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். வீடுகளில் குறைந்தது 27 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

Karthigai Deepam 2023: Know date, shubh muhurath, rituals , significance  and more

வீட்டு வாசலில் வைக்கப்படும் கோலத்தில் தீபம் ஏற்றி இருக்க வேண்டும். (கோலத்தில் ஐந்து முக தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்ததாக கருதப்படுகிறது). குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு அகல் விளக்குகளை எரிக்க நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அலங்கார விளக்குகளை வசதிக்கேற்ப பயன்படுத்தலாம்.

எந்த திசையில் தீபம் ஏற்றலாம்?

கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் துன்பம் நீங்கும். வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் அறிவு வளர்ச்சி உண்டாகும். மேற்கு திசையில் தீபம் ஏற்றினால் கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் விளக்குகளை தெற்கு திசை நோக்கி ஏற்றக்கூடாது.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)