தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

Unknown
By -
0



     தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாதேவி, கலை உடையாா் ஆகியோா் தலைமை வகித்தனா். 


கூட்டத்தில் 
பழைய ஓய்வூதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 30 சதவீத இடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றில் பணியாற்றும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)