புதிய ரூ.10, ரூ.500 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

123
By -
0




புதிய ரூ.10, ரூ.500 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: 

இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புதியதாக அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது.

அந்த வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸுக்கு ஒன்றிய அரசு பதவி நீட்டிப்பு செய்தது. 

இந்த பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிய ஆளுநராக மல்கோத்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றார்.

இதையடுத்து, புதிய ஆளுநரான மல்கோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய ரூ.100, ரூ.200 நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. 

இந்நிலையில், புதியதாக ரூ.10, ரூ.500 நோட்டுகளை அச்சடிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி (புதிய) தொடரில் உள்ள அனைத்து ரூ.500 மதிப்புள்ள நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். 

இந்த ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மகாத்மா காந்தி (புதிய) தொடரில் உள்ள ரூ.10 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகளைப் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
.
   

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)