கடல்சார் சட்ட கருத்தரங்கம்

123
By -
0

ஏப்ரல் 6 – சென்னை:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகமும் குஜராத் கடல்சார் பல்கலைக்கழகமும் (Gujarat Maritime University) இணைந்து மூன்று நாள் சர்வதேச கடல்சார் சட்ட கருத்தரங்கத்தை சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தின.

இந்த கருத்தரங்கில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கடல்சார் துறையில் முன்னணி நிபுணர்கள் பங்கேற்றனர்.

துவக்க நாளில் மாண்புமிகு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. ஸ்ரீராம் கல்பதி ராஜேந்திரன் (Shriram Kalpathi Rajendran) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

அத்துடன் பல்கலைக்கழக துணைவேந்தர் Col.Prof.Dr. என்.எஸ். குமார், கல்வித்துறைத் தலைவர் திரு. பாலாஜி மற்றும் பதிவாளர் திருமதி கௌரி ராமேஷ் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மூன்றாவது நாளான இறுதி நாளில் சிறந்த ஆய்வறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த வழங்குநர் விருது கிரைஸ்ட் அகாடமி இன்ஸ்டிடியூட் ஆப் லா, பெங்களூருவை சேர்ந்த மாணவர்கள் டான் சியோன் மற்றும் எட்ரியன் ஆகிய இருவருக்கும்  உயர்நீதிமன்ற நீதிபதி திரு. அப்துல் குத்தூஸ் (Abdul Quddhose) அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)