தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் துவங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் முதல் முறையாக சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுகுழு கூட்டம் (14/05/2025) புதன்கிழமை சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது..
.கூட்டத்தில் பகுதி நேர ஆசிரியராக பணியில் சேர்ந்து பல்வேறு சூழ்நிலையால் மற்றும் விபத்துகளால் உயிரிழந்த ஆசிரிய பெருமக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியது.
மற்றும்13ஆம் தேதி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஒருங்கிணைப்பு குழு நடத்திய உண்ணா விரத போராட்டத்திற்கு வருகை தந்த அத்தனை ஆசிரியர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்தும்...
போராட்டத்தின் இறுதியில் பேச்சுவார்த்தையின் போது பழைய கதையை தொடர்ந்து சொல்லி வந்த அதிகாரிகள் பேச்சை போராட்டத்தின் பந்தலில் தெரிவித்து எங்களுக்கு சரியான பதிலை ஜூன் மாதத்திற்குள் அறிவிக்கவில்லை என்றால் ஜூலை மாதம் 08 தேதி சிறை நிரப்பும் போராட்டம் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்துள்ளதால் அனைத்து ஆசிரியர்களையும் ஒன்று திரட்டி இந்த போராட்டத்தில் பங்கு பெற வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதற்கு உண்டான பணிகளை நாளை முதல் தொடங்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.
செய்தியாளர்
அனுபவஸ்தன்
கருத்துரையிடுக
0கருத்துகள்