இன்று கடைகள் இயங்காது
மதுராந்தகத்தில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ‘வணிகர் தின மாநாடு’ நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, இன்று மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளும் இயங்காது என்று ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
அதேபோல், வணிக வளாகங்கள், மொத்த மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள், சந்தைகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்டவைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வணிகர்களுக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிடும் முதல்வர்
இன்று மாலை நடைபெறவுள்ள 42-வது வணிகர் தின மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
வணிகர்களின் நலனைக் காக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும், வணிகர்களின் அத்தியாவசிய கோரிக்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டு தீர்வுகாணப்பட உள்ளன.
மேலும், சிறு வியாபாரிகள், வணிகர்களுக்கான சிறப்பு அறிவிப்புகளையும், சலுகைகளையும் இம்மாநாட்டில் முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
إرسال تعليق
0تعليقات