இரத்தம்...
இரத்த சுற்றோட்ட மண்டலம் என்பது உடல் முழுவதும் நடைபெறும் இரத்த சுழற்சியை விளக்கும் மண்டலமாகும். இதயத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த மண்டலம் உடல் இயக்கத்தின் மிக முக்கியமான பணிகளைச் செய்கிறது. இரத்தம் ஓர் ஊடகமாகும். இதன் மிக முக்கியமான பணி – செல்களுக்கு உணவையும், உயிர்க் காற்றையும் அளிப்பதும், செல்களின் கழிவுகளைப் பெற்றுக் கொண்டு வருவதும் ஆகும்.
மனித உடலின் நிர்வாக ரீதியான பேரறிவைப் புரிந்து கொள்ள உடலின் இரத்த ஓட்டத்தைப் புரிந்து கொள்வது அவசியமானதாகும்..
இரத்த சுற்றோட்ட மண்டலம்
இரத்த சுற்றோட்ட மண்டலம் என்பது உடல் முழுவதும் நடைபெறும் இரத்த சுழற்சியை விளக்கும் மண்டலமாகும். இதயத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த மண்டலம் உடல் இயக்கத்தின் மிக முக்கியமான பணிகளைச் செய்கிறது.
இரத்தம் ஓர் ஊடகமாகும். இதன் மிக முக்கியமான பணி – செல்களுக்கு உணவையும், உயிர்க் காற்றையும் அளிப்பதும், செல்களின் கழிவுகளைப் பெற்றுக் கொண்டு வருவதும் ஆகும்.
நாடு முழுவதும் சாலைகள் எவ்வாறு ஊர்களை இணைக்கின்றனவோ அது போல இரத்தம் முழு உடலையும் இணைக்கும் வேலையைச் செய்கிறது. நம் வீட்டில் தண்ணீரை எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் குழாய் அமைப்பும், கழிவு நீர் வெளியேற்றும் குழாய் அமைப்பும் ஒன்றாக அமைந்திருந்தால் என்ன செய்யுமோ அதே வேலையை நம்முடைய இரத்தம் செய்கிறது. இதனை ஒற்றை வார்த்தையில் விளக்க வேண்டுமானால் “ஒருங்கிணைப்பு”. இரத்தத்தின் தலையாய பணி – உடலை ஒருங்கிணைப்பதாகும்.
இரத்தத்தின் முக்கியப் பணிகள்
1. நுரையீரலால் கழிவு நீக்கப்ப்பட்டு, தரப்படும் உயிர்க்காற்றைப் பெற்று இரத்தம் உடல் முழுவதும் அமைந்துள்ள செல்களுக்கும் எடுத்துச் செல்கிறது.
2. செல்களில் உள்ள கழிவுகளை எடுத்து வந்து, சுத்திகரித்து வெளியேற்றும் உறுப்புகளுக்கு அளிப்பதும் இரத்த்தத்தின் வேலை.
3. நாளமில்லா சுரப்பிரகள் சுரக்கும் ஹார்மோன்களை உடலின் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் வேலையை இரத்தம் செய்கிறது.
4. உடலில் உள்ள வெப்பத்தின் அளவை பராமரிப்பதற்காக இரத்தம் தன் திரவத்தன்மையையும், இயல்பையும் பாதுகாத்துக் கொள்கிறது.
5. உடல் எதிர்ப்பு சக்தியின் மிக முக்கியப் பகுதியாக இரத்தம் செயல்பட்டு, அந்நியப் பொருட்களை எதிர்க்கும் நேரத்திலும், உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் நேரங்களிலும் உடலை பாதுகாக்க்கிறது.
இரத்தத்தின் பகுதிகள்
இரத்தமானது மனித உடலின் எடையில் பதினான்கில் ஒரு பங்கு சராசரியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நவீன ஆய்வுகளின் அடிப்படையில் உடலில் உள்ள ஒட்டுமொத்த இரத்த்த்தின் அளவு 4.5 லிட்டரில் இருந்து 6 லிட்டர் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரத்தம் 55 சதவீதம் திரவத்தையும், 45 சதவீதம் செல்களையும் கொண்டிருக்கிறது.
இரத்தம் கீழ்க்கண்ட பகுதிகளைக் கொண்டுள்ளது.
இரத்த சிவப்பு அணுக்கள்
இரத்த வெள்ளை அணுக்கள்
இரத்த தட்டுகள்
மஞ்சள் திரவம் என்னும் பிளாஸ்மா
*இரத்த சிவப்பு அணுக்கள்*
இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பு நிறத்தோடு இருப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றன. இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிகை அதிகம் இருப்பதால் இரத்தம் சிவப்பு நிறமாகத் தோற்றம் அளிக்கிறது. சிவப்பு அணுக்கள் சிவப்பு நிறமாக இருப்பதற்கு அதன் ஹீமோகுளோபின் எனும் நிறமிதான் காரணமாக இருக்கிறது.
இரத்த சிவப்பு அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் இருந்து பிறக்கின்றன. நெஞ்செலும்பு, விலா எலும்புகள், முதுகெலும்பு, தொடை எலும்பு, கையெலும்புகள் போன்ற எலும்புகளின் மஜ்ஜை பகுதிகளில் தான் அதிகளவில் உருவாகின்றன. எலும்பு மஜ்ஜை பகுதிகளுக்கு சக்தியளிப்பது மண்ணீரல் என்னும் உறுப்பு. மரபு வழி அறிவியலில் இரத்த செல்கள் உற்பத்தியாகும் இடம் மண்ணீரல் என்று கூறப்படுவது இதனால் தான்.
இரத்த செல்களின் அழிப்பு வேலைகளும் மண்ணீரலில் தான் நடைபெறுகின்றன. இரத்த சிவப்பு அணுக்கள் 80 நாட்களில் இருந்து 120 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. முதிர்ந்த சிவப்பணுக்கள் மண்ணீரலால் அழிக்கப்பட்டு, அதன் நிறம் தரும் பொருளான ஹீமோகுளோபின் (இரத்த நிறமி) கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது.
இரத்த சிவப்பணுவின் வடிவம் ஓர் அங்குலத்தில் 3000 இல் ஒரு பங்காக இருக்கிறது. நவீன அளவீட்டில் 0.008 செ.மீ. வட்ட வடிவமான மெத்தை போன்ற அமைப்புடனும், இருபுறமும் குழிந்தும், ஓரம் தடித்தும் அமைந்திருக்கும்.
இரத்த வெள்ளை அணுக்கள்
இரத்த வெள்ளை அணுக்கள் நிறமற்றும், வெள்ளை நிறத்தை பிரதிபலிப்பவையாகவும் அமைந்திருப்பதால் – இவை வெள்ளை அணுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. மொத்த இரத்தத்த்தில் சிவப்பு அணுக்களை விட, வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறைவு.
இரத்த வெள்ளை அணுக்களில் பல வகையான வெள்ளை அணுக்கள் இருக்கின்றன. குறிப்பாக ஐந்து வகைகளில் வெள்ளை அணுக்கள் இருப்பதகாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில வகை அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் இருந்தும், சில வகை அணுக்கள் நேரடியாக மண்ணீரலில் இருந்தும் பிறக்கின்றன.
வெள்ளை அணுக்களின் பிரதான வேலை – உடலில் நுழையும் எதிரிகளைத் தாக்குவது. உடலின் ஆபத்து காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பராமரித்து, ஒழுங்கு செய்வது. உடலில் ஏற்படும் காயங்களில் உருவாகும் சீழ் – வெள்ளை அணுக்களால் உருவாவது தான். வெள்ளை அணுக்கள் இறந்து சீழாக மாறுகின்றன..
வெள்ளை அணுக்கள் வட்ட வடிவம் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், இவைகளுக்கு குறிப்பிட்ட வடிவம் கிடையாது என்பதே உண்மை. இடத்திற்கும், பணிகளுக்கும் ஏற்றவாறு தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும் இயல்புடையது வெள்ளை அணுக்கள்.
இரத்த தட்டுகள்
சிவப்பணுக்களை விடவும் அளவில் சிறிய அணுக்கள் இரத்த தட்டுகள் என அழைக்கப்படுகின்றன. இவை சிவப்பணுக்களை விட மூன்றில் ஒரு பங்கு அளவில் சிறியவை. இவற்றின் அமைப்பு தட்டைப் போல இருப்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.
இரத்தத் தட்டுகள் உற்பத்தி ஆவதும் எலும்பு மஜ்ஜைகளில் இருந்து தான். நம் உடலில் எதிர்பாராமல் காயங்கள் ஏற்பட்டு இரத்தக் கசிவு ஏற்படுகிற போது, அதனை நிறுத்துவதற்காக இரத்தம் உறைதல் நடைபெறுகிறது. இந்த இரத்த உறைதலை ஏற்படுத்தும் மிக முக்கியமான அணுக்கள் – இரத்த தட்டுகள் ஆகும்.
பிளாஸ்மா எனும் மஞ்சள் திரவம்
இரத்தத்தின் பெரும்பகுதி காணப்படும் திரவம் தான் – பிளாஸ்மா. இது 90 சதவீதம் தண்ணீராலும், மீதமுள்ள 10 சதவீதம் உணவுச் சத்துகள், கரைக்கப்பட்ட வாயுக்கள், ஹார்மோன்கள், நோயெதிர்ப்பு அணுக்கள், என்சைம்கள் போன்றவைகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது.
மொத்த இரத்தத்தில் சுமார் 3 லிட்டர் அளவுக்கு பிளாஸ்மா இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தின் தகவமைப்பு மற்றும் ஆற்றுப்படுத்தும் தன்மைகளை உருவாக்குவது பிளாஸ்மாதான். இரத்தம் உறைதலில் முக்கியப் பங்காற்றும் பைப்ரினோஜன் எனப்படும் இழைகள் பிளாஸ்மாவில் தான் இருக்கின்றன.
இரத்தம் உறைதல்
இரத்தத்தின் முக்கியத்துவம் கருதி, அதன் இழப்பைத் தடுப்பதற்காக நம் உடலால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுதான் – இரத்தம் உறைதல்.
உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 15 சதவீதம் வரை வெளியேறிவிட்டால் கூட, உடலால் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்று இரத்தவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். சில அரிய நிகழ்வுகளில் உடலின் பெரும்பகுதி இரத்தம் வெளியேறிய பின்பும் கூட, உடல் தன்னைத் தற்காத்துக் கொண்டிருக்கிறது.
இரத்தம் செல்லும் பொதுவான பாதைகளில் இருந்து வேறுபட்டு, உடலிற்கு வெளியே போவதை இரத்த வெளிப்பாடு (ஹெமரேஜ்) என்று கூறுகிறார்கள். இப்படி வெளியேறும் இரத்தத்த்தின் அளவு அதிகமாக இருக்கும் போது, இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தம் அளவில் குறைவதால் அதன் அழுத்தம் பாதிக்கப்படுகிறது.
இரத்தம் உறைதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறத் துவங்குகிறது. சிதைந்த இரத்த தட்டுகள் த்ரோம்போகைனேஸ் எனும் பொருளை வெளியிடுகின்றன. இதுதான் இரத்த உறைவின் துவக்கப் பணியாகும்.
பிளாஸ்மாவில் இருக்கும் ப்ரோத்ராம்பின் என்ற பொருள் தூண்டப்பட்டு, இரசாயன மாற்றம் ஏற்பட்டு, த்ராம்பின் என்ற பொருளாக மாறுகிறது.
இந்த த்ராம்பின் பிளாஸ்மாவில் இருக்கும் பைப்ரினோஜனை – இழை போன்ற பைப்ரினாக மாற்றுகிறது.
பைப்ரின் இழைகளால் காயம் ஏற்பட்டுள்ள பகுதி அடைக்கப்படுகிறது. நேரடியாக இரத்த தட்டுகளும் இப்பகுதியில் குவிந்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.
பைபிரின் இழைகள் உருவாகி, இரத்த செல்களைச் சுற்றி இறுக்கி கட்டும் போது, செல்களில் இருந்து சீரம் எனும் திரவம் வெளியாகிறது. இதன் வெளியேற்றத்தால் இரத்தம் உறைகிறது.
இரத்த உறைவு மேற்கண்டவாறு நடைபெறுகிறது. இதனை 12 நிலைகளாகப் பிரித்து, நவீன அறிவியலாளர்கள் விவரிக்கிறார்கள்.
இரத்தம் உறைதல் மட்டும் நடந்தால் போதுமா? காயம் பட்ட பகுதியை அடைக்கும் பணி ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே, இரத்த வெளியேற்றத்தை தடுக்க இன்னொரு வேலையும் நடந்து கொண்டிருக்கும்.
உடலில் பாதிப்பு ஏற்பட்டவுடன், இரத்த தட்டுகள் செரடோனின் எனும் ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. செரடோனின் உற்பத்தி ஆனவுடன், அது இரத்த குழாய்களின் மேல் வினைபுரிகிறது. இரத்த குழாய்கள் சுருங்கி, இரத்தம் வெளியேறுவதை தடுத்து விடுகிறது.
உடலின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், தற்காத்துக் கொள்ளும் தன்மையையும் புரிந்து கொள்வதற்கு இரத்தம் உறைதல் ஒரு அற்புதமான உதாரணமாகும்.
இதயம்
இதயம் – உடல் இயக்கத்தின் மையமாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதனின் மூடிய கையளவு (முஷ்டி) தான் இதயத்தின் அளவு என்று கூறப்படுகிறது. சுமார் 300 கிராம் இதயத்தின் எடையாக இருக்கிறது.
இதயம் – மார்புக் கூட்டின் இடது பக்கமாக சரிந்து அமைந்துள்ளதால் – இடது புறம் அமைந்துள்ளது என்று கூறுகிறோம். இதயத்தின் மேற்புரத்தில் இரத்த குழாய்களும், பின்புறம் முதுகெலும்பும் அமைந்துள்ளது. மார்புக் கூட்டில் நுரையீரலின் இரு பைகளுக்கு இடையில் பாதுகாப்பான விதத்தில் இதயம் அமைந்துள்ளது.
இதயத்தின் மேலுறையை உள் உறை, நடு உறை, வெளி உறை என அழைக்கப்படும் மூன்று உறைகளாக பிரிக்கிறார்கள். முழு இதயத்தையும் மூடிக் கொண்டிருக்கும் சவ்வு அமைப்பை பெரிகார்டியம் என்று அழைக்கிறார்கள். அக்குபங்சர் மருத்துவத்தில் கூறப்படும் பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றியுள்ள கண்ணுக்குத்தெரியாத வெப்பத் திரையை குறிக்கிறது. பிற்காலத்தில், நவீன அறிவியலால் இதய உறை கண்டுபிடிக்கப்பட்ட போது, பழைய சொல்லான பெரிகார்டியமே பயன்படுத்தப்பட்டது. ஆனால், நவீன பெரிகார்டியம் என்பது சவ்வாலான அமைப்பைக் குறிக்கிறது.
இரத்தக் குழாய்கள்
உடல் முழுவதும் இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களை அவற்றின் தன்மை மற்றும் அளவைக் கொண்டு மூன்றாகப் பிரித்து புரிந்து கொள்ளலாம்.
தமணிகள்
சிரைகள்
நுண்குழல்கள்
தமணிகள்
தமணிகள் இதயத்திலிருந்து உறுப்புகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். இக்குழாய்கள் தடித்த சுவர்களுடன் காணப்படுகின்றன. இரத்தத்தை உள்ளுறுப்புகளுக்குக் கொண்டு செல்வதற்காக உறுப்புகளின் உட்பகுதியில் தமணிகள் சிறியதாகப் பிரிந்து செல்கின்றன. இந்த கிளைத் தமணிகளை நுண் தமணிகள் என்று அழைப்பார்கள்.
இந்த நுண் தமணிகளின் மிகச்சிறிய பிரிவுகளே தந்துகிகள் அல்லது நுண்குழல்கள் என அழைக்கப்படும் கேப்பிலரிஸ் ஆகும்.
பொதுவாக தமணிகள் சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன.
சிரைகள்
உறுப்புகளில் இருந்து இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு சிரைகள் என்று பெயர். தமணிகளைப் போன்றே சிரைகளும் தடித்த சுவர்களுடன் காணப்படுகின்றன.
தமணிகளுக்கும், சிரைகளுக்கும் இரு முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன.
பொதுவாக தமணிகளில் சுத்திகரிக்கப்பட்ட இரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது. சிரைகளில் சுத்திகரிக்கப்பட வேண்டிய அசுத்த இரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது.
தமணிகளில் இரத்தம் எந்தத் தடையும் இல்லாமல் இயல்பாகச் செல்கிறது. ஆனால், சிரைகளில் வால்வுகள் அமைந்திருக்கின்றன. இரத்தம் ஓடுகிற திசை நோக்கி மட்டுமே திறக்கும் தன்மையில் இந்த வால்வுகள் அமைந்துள்ளன.
சிரைகளின் மிகச்சிறிய பகுதி நுண்சிரை என்று அழைக்கப்படுகிறது. நுண் சிரைகள் இன்னும் சிறியவைகளாகப் பிரிந்து நுண்குழல்கள் அல்லது தந்துகிகள் என்று அழைக்கப்படுகின்றன.
நுண்குழல்கள் / தந்துகிகள்
தமணிகளுக்கும் நுண்குழல்களுக்குமான மிக முக்கிய வேறுபாடு அதன் அளவு மட்டுமல்ல. தமணிகள் இதயத்தில் இருந்து தூரமாகப் போகும் போது அளவு குறைந்து கொண்டே செல்லும். ஆனால், நுண்குழல்கள் உடல் முழுவதும் ஒரே அளவிலேயே காணப்படுகின்றன.
தமணி இரத்தத்தையும், சிரை இரத்தத்தையும் பரிமாறிக் கொள்ளும் இடம் நுண்குழல்கள் ஆகும். தமணியும் நுண் குழல்களில் தான் முடிவடைகிறது. சிரையும் நுண்குழல்களில் தான் முடிவடைகிறது. இரத்தத்திற்கும் செல்களுக்குமான பரிமாற்றத்தை நுண்குழல்களே செய்கின்றன. இரத்தத்தின் வழியாக வரும் உயிர்க்காற்று மற்றும் உணவுச் சத்துகளை நுண்குழல்கள் செல்களுக்கு அளிக்கின்றன. அதே நேரத்தில், செல்களில் உள்ள கழிவுகளைப் பெற்று திரும்புகின்றன.
தமணி இரத்தத்தை எடுத்துச் செல்லும் நுண்குழல்கள், சிரை இரத்தத்தை எடுத்து திரும்புகின்றன.
இதயத்தின் அமைப்பும், செயலும்
இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இதயம் நடுச்சுவரால் வலது, இடது என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இந்த இரண்டு பகுதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
சுத்த இரத்தத்தையும், அசுத்த இரத்தத்தையும் கலக்க விடாமல் வலது, இடது எனப் பிரிக்கும் நடுச்சுவர் பாதுகாக்கிறது.
வலது, இடது இருபகுதிகளிலும் உள்ள மேலறைகள் ஏட்ரியம் அல்லது ஆரிக்கிள் என்று அழைக்கப்படுகின்றன. அதே போல, கீழ் அறைகள் வெண்ட்ரிக்கிள் என்று அழைக்கப்படுகின்றன. ஆக, இதயம் வலது ஆரிக்கிள், வலது வெண்ட்ரிக்கிள், இடது ஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள் என நான்கு அறைகளாக அமைந்திருக்கிறது.
இதயம் ஆறு வித வால்வுகளைக் கொண்டு, இரத்தத்தை இயக்குகிறது. இந்த வால்வுகள் இரத்தத்தின் திசையை நிர்ணயிக்கின்றன.
இதயத்தின் வால்வுகள்
1. மேல் பெருஞ்சிரை மற்றும் கீழ்ப்பெருஞ்சிரை வால்வுகள்
2. நுரையீரல் சிரை வால்வு
3. மகாதமணி வால்வு
4. நுரையீரல் தமணி வால்வு
5.வலது ஆரிக்கிளுக்கும், வலது வெண்ட்ரிக்கிளுக்கும் இடையில் உள்ள மூவிதழ் வால்வு.
6.இடது ஆரிக்கிளுக்கும், இடது வெண்ட்ரிக்கிளுக்கும் இடையில் உள்ள ஈரிதழ் வால்வு.
இதயத்தின் இயக்கம்
உடல் முழுவதும் இருந்து வந்து சேர்கிற அசுத்த இரத்தம் மேல், கீழ் பெருஞ்சிரைகளின் மூலமாக வலது ஆரிக்கிளுக்குள் செல்கிறது. இப்போது வலது ஆரிக்கிள் சுருங்கி – வலது வெண்ட்ரிக்கிளுக்குள் அசுத்த இரத்தத்தை அனுப்புகிறது. வலது வெண்ட்ரிக்கிள் சுருங்கி, அசுத்த இரத்தத்தை நுரையீரல் தமணிக்குள் அனுப்புகிறது.
நுரையீரல் தமணியின் வழியாக அசுத்த இரத்தம் உயிர்க் காற்றைப் பெற்றுக் கொள்வதற்காக – நுரையீரலை நோக்கிச் செல்கிறது. இதனை நுரையீரல் இரத்த ஓட்டம் என்று அழைக்கிறார்கள்.
நுரையீரலில் சுத்தம் செய்யப்படுகிற இரத்தமானது நுரையீரல் சிரைகள் மூலமாக இதயத்தின் இடது ஆரிக்கிளுக்குள் வந்து சேர்கிறது. இடது ஆரிக்கிள் சுருங்கி – சுத்த இரத்தத்தை இடது வெண்ட்ரிக்கிளுக்குள் செலுத்துகிறது. இடது வெண்ட்ரிக்கிள் வழியாக சுத்த இரத்தமானது மகாதமணி வழியாக உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது. இது பொது இரத்த ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், பித்தப்பை போன்றவற்றில் இருந்து பெறப்படும் அசுத்த இரத்தத்தை போர்ட்டல் சிரை எடுத்துச் செல்கிறது. இந்தப் போர்ட்டல் சிரை பல சிறிய கிளைகளாகப் பிரிந்து, கல்லீரலுக்குள் செல்கிறது. சிரையில் ஓடும் அசுத்த ரத்தமானது பொது இரத்த ஓட்டத்திற்கு செல்வதற்கு முன்னால் கல்லீரல் வழியாகச் செல்கிறது. இந்த இரத்த ஓட்டம் கல்லீரல் இரத்த ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.
மனித உடலின் நிர்வாக ரீதியான பேரறிவைப் புரிந்து கொள்ள உடலின் இரத்த ஓட்டத்தைப் புரிந்து கொள்வது அவசியமானதாகும் .
إرسال تعليق
0تعليقات