இருளில் மூழ்கியது திருவேற்காடு
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் திருவேற்காடு சுந்தர விநாயகர் நகர் மற்றும் கஸ்தூரிபாய் அவன்யூ மற்றும் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் இன்று 11/05/2025 மதியம் இரண்டு மணி முதல் இதுவரை மின் தடை ஏற்பட்டுள்ளது.
கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டும் பயனேதுமில்லை.
மின்சார துறை அரசு ஊழியர்கள் தெண்ட சம்பளம் வாங்குவதாக மக்கள் புலம்பல்.
திருவேற்காடு இரண்டாவது வார்டு நகரமன்ற உறுப்பினர் திரு. ஆசிர்வாதம் அவர்கள் பொது மக்களுடன் நள்ளிரவில் மின் துறை அலுவலகம் முற்றுகை.
காற்று, மழை, தூரல் என எது வந்தாலும் உடனே மின்சார துண்டிப்பு. பிறகு பல மணி நேரங்கள் மின் தடை.
1912 இந்த எண்ணில் கால் செய்தால் இன்னும் பத்து நிமிடம் என்பார்கள்.
04426800070 இந்த எண்ணில் ரிசிவர் கீழே எடுத்து வைத்து விடுவார்கள் அல்லது யாருடனாவது கடலைப் போடுவார்கள். மக்களே இதை நேரில் பார்த்துள்ளனர். இதனால் எப்போதும் பிசி என்று சொல்லும்.
ஏடி கைபேசி எண்ணிற்கு கால் செய்தாலும் பிசி தான்.
3506481 மின் துறை புகார் எண்
மக்கள் யாரிடம் குறைகளை சொல்வது.
இன்றைய இரவு திருவேற்காடு மக்களுக்கு சிவராத்திரி கலந்த வைகுண்ட ஏகாதசி ஆகும்.
திருவேற்காடு மின்சார துறை ஊழியர்கள் மிக மோசமாக பணிபுரிவதாக மக்கள் புலம்புகின்றனர்.
இதை நடப்பாட்சியின் மானத்தை காக்க முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
إرسال تعليق
0تعليقات