சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது...
*வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது...
*அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது.
*நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம். பேரிச்சம்பழம்+கொய்யாக்காய், பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சாப்பிடலாம்.
மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம். ஒரே நாளில் அனைத்து பழ வகைகளையும் சாப்பிட கூடாது நலன்கருதி...
கார் / பைக் வாகனம் பயன்படுத்தாது, தினமும் 2KM சைக்கிள் ஓட்டுவது கால் எரிச்சல் இல்லாமல் இருக்கும்...
காலையிலும் மாலையிலும் வெகு தூரம் நடந்து செல்வது மிகமிக நல்லது...
إرسال تعليق
0تعليقات