செய்திகள்தமிழகம்மாநிலம்

குரூப் 4 ஹால்டிக்கெட் வெளியிடு….. 3,935 காலியிடங்களுக்கு 20 லட்சம் பேர் போட்டி

20 லட்சத்துக்கு மேற்பட்ட வேலை உள்ள குரூப் 4 தேர்வு தேர்வுக்கு ஹால் டிக்கெட் ஆனது (புதன்கிழமை) இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு  சுமார் 3935 காலி பணியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் தமிழ்நாடு தேர்வாணையம் உள்ளது இன்று மாலை ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலை உதவியாளர் , தட்டச்சு,  சுருக்கெழுத்து தட்டச்சு, கிராம நிர்வாக அலுவலர்  , வனக்காப்பாளர்கள் , தமிழ்நாடு வாரிய மாசு கட்டுப்பாட்டு உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 3935 பதவிகள் இறப்பு வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அன்று வெளியிட்டது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அன்றைய தினம் தொடங்கி மே 24-ம் தேதி முடிவடைந்தது.

 

குருப்-4 தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் பொறியியல் பட்டதாரிகள் என உயர் கல்வித் தகுதி உடையவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர். மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் இணையதளத்தில் புதன்கிழமை மாலை பதிவேற்றம் செய்யப்பட்டது.

 

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

 

குருப்-4 தேர்வை பொருத்தவரையில் நேர்முகத் தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு பணி வாய்ப்பு உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் 3,935 என்ற போதிலும் காலியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலியிடங்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் அளவுக்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கட் ஆப் மதிப்பெண் குறையும்..

 

 

Related Articles

Back to top button
அழகு குறிப்புகள்: முகம் பொலிவாக இருக்க 7 எளிய Skin Care Tips முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker