
பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்!
பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நல குறைவால் காலமானார்.
கடந்த சில காலமாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்ட அவர், 2023-ம் ஆண்டோடு நடிப்பதை நிறுத்தினார்.
தமிழில் ‘சாமி’ படத்தில் வில்லனாக அறிமுகமானவர், எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் 750 படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் அவரின் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







