
பா.ஜ.க., வில் இருந்து த.வெ.க., வுக்கு ஐக்கியம்..!
ஈரோடு செப் 9
பாரதிய ஜனதா கட்சி யில் ஈரோடு மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.நமச்சிவாயம் ஈரோடு அம்மன் டெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபரும், சினிமா பட தயாரிப்பாளரும் ஆவார்.
தற்போது ஈரோடு மாநகராட்சி 39வது வார்டில் வசித்து வரும் இவர் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் மாற்றத்தை நோக்கி பயணிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய முடிவு செய்தேன். அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தமிழ்நாடு கைத்தறி மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய பாலாஜி ஆகியோரின் முன்னிலையில் என்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டேன்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த எனது ஆதரவாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களை ஒன்றாக திரட்டி தமிழக வெற்றி கழகத்தில் இணைக்கும் மாபெரும் இணைப்பு விழா நிகழ்ச்சி விரைவில் ஈரோட்டில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஒன்றாக பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று தொழிலதிபர் ஆர்.நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவரது இந்த திடீர் இணைப்பு ஈரோடு அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.





