Anna University :அண்ணா பல்கலைக்கழகம். வேலை வாய்ப்பு; சம்பளம் ரூ 25000; பொறியியல் மாணவர்கள் விண்ணப்பம்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் திண்டிவனில் உள்ள பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பதவி தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு; பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: n M.E. / M.Tech. பொறியியல் அல்லது தொழில்நுட்பம்(கட்டமைப்பு/கலவைகள்/பாலிமர் அறிவியல் மற்றும் பொறியியல்/பொறியியல் வடிவமைப்பு) அல்லது M.Sc(வேதியியல்) அல்லது M.Sc (பாலிமர் அறிவியல்) அல்லது M.Sc (பயோடெக்னாலஜி) அல்லது B.Tech(கலவைகள்).
சம்பளம்: ரூ. 25000+8% HRA
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி: டாக்டர். ஆர். கோபிநாத் உதவிப் பேராசிரியர் & HODi/c மற்றும் முதன்மை ஆய்வாளர், சிவில் இன்ஜினியரிங் துறை, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திண்டிவனம், திண்டிவனம்– 604301
இந்த அறிவிப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/ ஐப் பார்வையிடவும்.
إرسال تعليق
0تعليقات