கடன்காரர்களுக்கு பயந்து குழந்தையை கொன்ற தாய் பூட்டையில் பரபரப்பு.

Theechudar - தீச்சுடர்
By -
0

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம். பூட்டை கிராமத்தில் வசித்து வருபவர் பிரகாஷ் சத்யா தம்பதிகள் இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்றாவது குழந்தையான அதிசயா வயது 7 காணவில்லை என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சங்கராபுரம் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

 

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்

நிலையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஆய்வு மேற்கண்ட போது சிறுமி அதிசயவை அவர் தாய் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது இதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் சத்யாவை விசாரணை செய்தனர் அப்போது குழந்தையின் தாய் கூறியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

பூட்டை கிராமத்தில் உள்ள பலரிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் வரை கடன் வாங்சிருப்பதாகவும். அதை குறிப்பிட்ட நாளன்று திருப்பித் தருவதாகவும் கூறியிருக்கிறார்.

 

கூறிய தேதி நெருங்கி வருவதை தொடர்ந்து செய்வதறியாது தனது மக்களை விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டால் துக்க வீட்டில் பணம் எப்படி கேட்பது என்று நினைத்து கடன் காரர்கள் சென்று விடுவார்கள் என்று எண்ணி தனது மகள் அதிசயா வயது 7 கிணற்றில் தள்ளி கொன்று விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.. இது அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)