தீபாவளி இன்று மழை பெய்யும் ... 19 மாவட்டங்களுக்கு கனமழை 'எச்சரிக்கை'

Theechudar - தீச்சுடர்
By -
0

சென்னை: தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது.பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதற்கிடையில், மன்னார் வளைகுடா பகுதியில், ஒரு சுழற்சி மண்டல கீழ்நோக்கி சுழற்சி காணப்படுகிறது. இந்த இரு அமைப்புகளின் தாக்கத்தால், வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

அதன்படி நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று கனமழை பெய்த நிலையில், தீபாவளி பண்டிகையான இன்று 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்று

திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை

நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)