மாத சம்பளம் 3 லட்சம்.! 30ஆயிரத்திற்குமேல் காலியிடங்கள்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Theechudar - தீச்சுடர்
By -
0

நன் முழுவன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.3 லட்சம் வரை.

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்புக்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணிக்கான தேர்வை நடத்தி பணியாளரை தேர்வு செய்யும். இதற்காக தமிழக அரசு சார்பில் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழக இளைஞர்களுக்கு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. அடுத்ததாக, தமிழக இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாராந்திர சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் இணைகின்றனர்.

article_image5job

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

அடுத்து சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு முறையான பயிற்சி அளித்து கடன் உதவிக்கான வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது. அடுத்ததாக, வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் காலியிடங்களுக்கான அறிவிப்பையும் அவ்வப்போது அறிவிக்கிறது. அந்த வகையில் ஜெர்மனியில் குவிந்துள்ள வேலைவாய்ப்புக்கான சூப்பர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நன் முதுவன் திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழிப் பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

இதையும் படியுங்க : Union Bank of India Jobs : யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை 1500 காலி பணியிடங்கள். Job Vacancy ..

3 லட்சம் மாத சம்பளம்

ஜெர்மனிக்கு பல்வேறு துறைகளில் 1.7 மில்லியன் திறமையான தொழிலாளர்கள் தேவை. அங்குள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு கணிசமான பற்றாக்குறை இருப்பதாகவும், அதிகரித்து வரும் சுகாதாரத் தேவைகள் காரணமாக ஆண்டுதோறும் 35,000 தாதியர் காலியிடங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதவிகளுக்கு மாதம் 3 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக ஜெர்மன் மொழி கற்பித்தல் பயிற்சி நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை தகுதி :

B.Sc நர்சிங் அல்லது GNM குறைந்தபட்சம் 1+ வருட அனுபவம்.

வேலை விவரம்:

நர்சிங் உதவியாளர்கள், பராமரிப்பாளர்கள்.

ஜெர்மன் கற்பிக்க வேண்டிய நேரம்

B2 திறன் (8 மாதங்கள்).

இதையும் படியுங்கள் : Recruitment Village Assistant 2299 காலி பணியிடங்கள் கிராம உதவியாளர் வேலை உடனே அப்ளை பண்ணுங்க !!

இலவச கல்வி :

இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 25

பயிற்சி தொடங்கும் நேரம்

நவம்பர் 1, 2024 அன்று முதல் வாரத்திற்கு 5 நாட்கள் (8 மணிநேரம்/நாள்).

ஜெர்மனியில் வேலை செய்வதன் நன்மைகள்:

மகப்பேறு விடுப்பு, மருத்துவக் காப்பீடு வேலை பாதுகாப்பு மற்றும் வேலையின்மை காப்பீடு, – சுகாதார காப்பீடு, 5 ஆண்டுகள் சட்டப்பூர்வ குடியுரிமை, மாதாந்திர குழந்தை கொடுப்பனவு, அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இலவச கல்வி

பயிற்சி நடை பெரும் இடங்கள்:

சென்னை, கோவை, மதுரை, திருச்சி

பயிற்சிநடை பெரும் முறை : நேரடி பயிற்சி

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)