மாவட்ட ஆட்சியர்.மாவட்ட திட்ட அலுவலர். சுகாதார ஊக்குனர்கள் ஊதியம் கேட்டு பேச்சு வார்த்தை..

Theechudar - தீச்சுடர்
By -
0

கள்ளக்குறிச்சி

ஒட்சா ஊராட்சி பணியாளர்கள் மாநில சங்கத்தின் சார்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 412 ஊராட்சிகளில் பணி புரிகின்ற 426 சுகாதார ஊக்குனர்களுக்கு ஒன்பது மாதம் தொகுப்பு ஊதியம் நிலுவையில் உள்ளதை 25 /10 /2024.

இன்று மாநில மையத்தின் சார்பாகவும் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட திட்ட அலுவலர் அவர்கள் மற்றும் ஏ டி பஞ்சாயத்து திட்ட இயக்குனர் அவர்களிடம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சுகாதார ஊக்குனர்களின் ஊதியங்களை நிலுவையின்றி வழங்குமாறு பேசி மனுக்கள் அளிக்கப்பட்டது.

இப்பேச்சு வார்த்தையின் முடிவில் மிக விரைவில் சுகாதார ஊக்குனர்களுக்கு உண்டான ஊதியங்களை வழங்குவதாக கூறியுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது ரிஷிவந்தியம் ஒன்றிய எழிலரசி . நிஷா. அத்தியூர் எழிலரசி. ஜெயந்தி.

இவர்களுடன் தியாகதுருகம். உளுந்தூர்பேட்டை. சங்கராபுரம். கள்ளக்குறிச்சி. சின்னசேலம். திருநாவலூர். ஆகிய ஒன்றியத்தில் பணிபுரியும் சுகாதார ஊக்குனர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

செய்தியாளர். எஸ் சிவலிங்கம். ரிஷிவந்தியம்.  Cell : 8925458693

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)