Kanguva Movie : 'கங்குவா'வில் கார்த்தியா ? - சூர்யா பதில்

Theechudar - தீச்சுடர்
By -
0

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து ‘கங்குவா’ படத்தில் கார்த்தி நடித்துள்ளாரா என்ற கேள்விக்கு சூர்யா பதிலளித்துள்ளார்.

டெல்லி மற்றும் மும்பையில் புரமோஷன்களை முடித்துவிட்டு, நேற்று (அக்டோபர் 24) ஹைதராபாத்தில் புரமோஷன்களை தொடங்கினார் சூர்யா. ‘கங்குவா’ பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யாவிடம், “கங்குவாவில் கார்த்தி நடிக்கிறாரா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரிடமும் சில நொடிகள் பேசினார்.

Tamil star Suriya strikes gold, Kanguva sold for Rs 25 cr in ...

அப்போது சூர்யா, “ஏன் தியேட்டர் ஆச்சரியத்தைக் கெடுக்கறீங்க. பார்க்கலாம். கார்த்தி மற்றும் பிற நடிகர்கள் போல் சிலர் திரைக்கு வரலாம். தியேட்டர் அனுபவத்திற்காகக் காத்திருங்கள்” என்று பதிலளித்தார். இந்த பதிலின் மூலம் ‘கங்குவா’ படத்தில் கார்த்தி நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. கார்த்தி மட்டுமின்றி அனிருத்தும் ஒரு பாடலில் கண்ணியமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)