அதிசய வாழை மரம்... கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில்

Theechudar - தீச்சுடர்
By -
0

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகண்டை x ரோடு அருகில் ஒரு அதிசயம் கொண்ட வாழை மரம் உள்ளது.
இந்த வாழை மரத்தில் ஒரு அதிசயமான ஆச்சர்யப்படும் அளவிற்கு புதுமையான வாழை குலை ஒன்று வந்துள்ளது.

இந்த வாழை மரத்தின் குலை வழக்கம்போல் மேல் தலைப் பகுதியில் இல்லாமல் நடுவில் குலையாய் வந்துள்ளது மிகவும் ஆச்சிரியம் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்த வாழை மரத்தில் உள்ள குலையானது மேலும் இல்லாமல் குள்ள வகை வாழை சொல்லப்படும் அளவிற்கும் அமைய வில்லை. மிகவும் அதிசயம் கொண்ட இந்த மரம் வளரும்போதே இரண்டாக பிளந்து வந்ததா எப்போதும் போலவே மற்ற வாழை கன்றுக்களும் வளர்ந்து வருவது போலவே வந்ததா என்று வீட்டில் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் அப்பாராசு விடம் கேட்டபோது. எப்பவும் போலவே எல்லா வாழைக் கன்றுக்களும் இலைகள் மற்றும் வடிவங்கள் ஒரே மாதிரியாகத்தான் வந்தது என்றும் இந்த வாழை மரம் உயரமான அளவில் வளரும்போதும் மற்ற மரங்களுடன் சமமான உயரத்திலதான் வளர்ந்து வந்தது எனக் கூறியவர் இந்த வாழை மரத்தில் வந்துள்ள குலை எப்படி மேலே வராமல் நடுவில் குலைத் தள்ளியதுஎன்று திகைத்து போனேன்.

இதையும் படியுங்கள் : வானிலை அறிவிப்பு: நெருங்கியது புயல் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் ! 8 மாவட்டங்களுக்கு கனமழை

எனக்கு வழது கிட்டத்திட்ட 60 கடந்துவிட்டது இதுவரை நான் இது போன்ற வாழை மரம் குலைத்தள்ளியதை பார்த்ததில்லை. அதுமட்டுமில்லாமல் நெருக்கமான காய்களை தந்து மரத்தின் நடுவில் குலை தள்ளியிருப்பது அதிசயமாகாத்தான்இருக்கிறது. இதை பழம் பழுக்கும் வரை பாதுகாப்பேன் என்றும் அதிசய மகிழ்ச்சியில் சிரித்தபடி கூறினார். பார்க்கும்போது எப்படி இந்த குலை வந்தள்ளது என்று உரிமையாளர், முன்னாள் கவுன்சிலர், வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அப்பாராசு வியந்து இந்த அதிசய வாழை மரத்தை அவரது வீட்டின் அருகில் வளர்த்து வருவதை பொது மக்களும் இந்த அதிசயமான வாழை மரத்தை பார்த்த வண்ணம் உள்ளனர்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)