மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 7 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு மற்றும் அரசு நிகழ்ச்சிகளும் ரத்து !

Theechudar - தீச்சுடர்
By -
0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் டிசம்பர் 26 வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டாக்டர் மன்மோகன் சிங்கின் மரணம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இறுதிச்சடங்கு டிசம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 7 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கிறது. டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டம் நடத்தவுள்ளது. அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியின் அடிக்கல் நாட்டு விழா உள்பட அடுத்த 7 நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)