பன்னரெண்டாம் வகுப்பு படிக்கும் ஆட்டோ ஓட்டுனரின் மகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி இவரது மூத்த மகள் சதர்ஸ் ஸ்ரீ இவர் அதே பகுதியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
சதர்ஸ் ஸ்ரீ ஐந்து வயது முதல் தேக்வாண்டோ பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார்.
தேசிய அளவிலான போட்டி
SGFI தேக்வாண்டோ தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற 68 -வது தேசிய அளவிலான SGFI தேக்வாண்டோ போட்டியில் 19 வயது நிரம்பியவருக்கான 68- கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் இருந்து தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றது தங்களுக்கு பெருமிதமாக உள்ளது என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுபோன்ற கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் எனவும் ,
இது போன்ற விளையாட்டு துறையில் சாதிக்கவிருக்கும் பெண் பிள்ளைகளுக்கு தமிழக அரசு உதவ முன் வருமாறும், மாணவியின் பயிற்சியாளர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்…
க.சங்கர்
செய்தியாளர். சின்னசேலம்
செல்-8489495747
إرسال تعليق
0تعليقات