இலவச கண் சிகிச்சை முகாம் கும்பகோணம்..

Theechudar - தீச்சுடர்
By -
0

கும்பகோணம்:

கீழக்கோட்டையூரில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 350 பேர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட பார்வையற்றோர் தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தியது.

கும்பகோணம் அருகே சுவாமிமலை சாலையில் உள்ள கீழக்கோட்டையூர் வள்ளலார் தொடக்கப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் லயன் இரவி துவக்கி வைத்தார். தலைவர் லயன் டி.விஜயன், சங்க செயலாளர் லயன் கணேசன், பள்ளி. தலைவர் தயாளன், செயலாளர். பழனிசாமி. உடனிருந்தனர்.

சங்க முன்னாள் தலைவர்கள் லயன் மருதையன் லயன் ராஜேந்திரன். லயன் பாலசுப்ரமணியன், சங்க உறுப்பினர்கள் பொருளாளர் லயன் அருண். நிருபர் குமார் சிவராம கிருஷ்ணன். சிங்க பெருமாள். சிங்கம் அமுதச்செல்வி சிங்கம் புவனேஸ்வரி. மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சேவை செய்தனர்.

அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களின் கண்களை பரிசோதனை செய்தனர். நகர் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 350 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 60 பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. இதில் 51 பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு உள்விழி லென்ஸ்கள், அறுவை சிகிச்சை, மருந்து, தங்குமிடம், உணவு, போக்குவரத்து போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன.

முகாமில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் என்எஸ்எஸ் மாணவர்களுக்கும், தங்குமிட வசதி வழங்கிய வள்ளலார் கல்விக் குழுமத்திற்கும் எங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் பணியாற்றிய அனைவருக்கும் சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)