வரலாற்றில் இன்று மார்ச் 21

Unknown
By -
0

கருப்பின மக்களின் உரிமைகளுக்காக மார்டின் லூதர் கிங் நடைபயணம் தொடங்கிய தினம் இன்று (1965).

எஸ்.என்.சி.சி. அமைப்பைச் சேர்ந்த ஜான் லூயிஸ் மற்றும் எஸ்.சி.எல்.சி. அமைப்பின் ரெவெரண்ட் ஹோசியா வில்லியம்ஸ் தலைமையில் கருப்பினப் போராளிகள் 600 பேர் அமெரிக்க நெடுஞ்சாலை 80 வழியாக நடைபயணத்தைத் தொடங்கினார்கள். எட்மண்ட் பெட்டஸ் பாலத்தைக் கடந்து வந்த அந்தப் போராட்டக் குழுவினர், டல்லாஸ் கவுண்ட்டிக்குள் நுழைந்தார்கள். அப்போது குண்டாந்தடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள் சகிதம் போலீஸார் சாலையில் அவர்களை எதிர்கொண்டார்கள்.
வெள்ளையின போலீஸாரின் குண்டாந்தடிகள் இரக்கமின்றித் தாக்கின. குதிரைகளில் அமர்ந்திருந்த வெள்ளையின போலீஸாரும் தாக்குதலில் இறங்கினர். கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர். மோசமாகக் காயமுற்ற 17 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு முழுவதும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானபோது அமெரிக்காவே அதிர்ந்தது. கருப்பின மக்கள் கொதித்தெழுந்தார்கள்; சக மனிதர்களை இப்படியா நடத்துவது என்று மனசாட்சி கொண்ட வெள்ளையின மக்களும் கோபமடைந்தனர். இந்த நிகழ்வு ‘ரத்த ஞாயிறு’ (பிளடி சன்டே) என்று அழைக் கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, எஸ்.சி.எல்.சி. தலைவர் மார்ட்டின் லூதர் கிங் களத்தில் இறங்கினார்.
1965 மார்ச் 21-ல் அவரது தலைமையில் தொடங்கிய நடைப்பயணம் மார்ச் 25-ல் மான்ட்கோமரி நகரில் முடிவடைந்தது. போராட்டத்தின் முடிவில் ‘ஹவ் லாங், நாட் லாங்’ எனும் தலைப்பில் அவர் நிகழ்த்திய உரை சரித்திரப் புகழ் மிக்கது. அமெரிக்க அதிபரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த வெள்ளையின மக்களும் கருப்பின மக்களின் பக்கம் நின்றதால், கருப்பின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)