இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு
ஏப்ரல் 28ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை
இரட்டை இலை சின்னம், அதிமுக நியமனங்களை எதிர்த்த வழக்கு ஏப்ரல் 28ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை செய்கிறது.
சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் விசாரணை"
"அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக, சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் விசாரணை"
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சூர்யமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கு.
ஓ.பி.எஸ், இ.பி.எஸ் நேரில் ஆஜராக உத்தரவு
இரட்டை இலை விவகாரத்தில் EPS, OPS வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்ததால், அவர்களும் நேரில் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வரும் 28-ம் தேதி விசாரணையை தொடங்குவதால், மாலை 3 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
إرسال تعليق
0تعليقات