சட்டத்துக்கு புறம்பாக செயல் பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு.

Unknown
By -
0


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு , கிழக்கு ,  வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பூத் முகவர்கள் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டையில் உள்ள ஆண்டவர் திருமண மஹாலில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக தெற்கு மாவட்ட செயலாளரும்,ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினருமான  வசந்தம்.க. கார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினர்  தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு பிறகு மாலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் டேபிள்களில் இலைகள் வைத்து இலையின் மீது கறி உணவு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுக்கு அருந்துவதற்காக ஒவ்வொரு இலையின் மீது வைக்கப்பட்டுள்ளது .  இச்செய்தி சமூக வலைதளங்களில் பரவலாக பரவியதை அடுத்து பல பெண்களுக்கும் பொது மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சட்டத்துக்கு புறம்பாக மது கடத்தி வந்து இளைஞர்களுக்கு மதுப்பழக்கத்தை ஏற்படுத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும் சட்டத்துக்கு புறம்பாக மது அருந்த அனுமதி கொடுத்த மண்டபத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தும் அனுமதி 
மது அருந்த உரிமம் இல்லாமல் மண்டபத்தை பயன்படுத்திய மண்டபத்தின் உரிமையை ரத்து செய்யக் கோரியும் புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் பூவை.ஆறு  தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம்  சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்ட இவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்திட வேண்டுமென்று மனு அளிக்கப்பட்டது மனுவினை ஏற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மக்கள் பிரதிநிதி சட்டமன்ற உறுப்பினர் திரு வசந்தம்.கார்த்திகேயன் மீது திமுக தலைமை நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் தொடர்ந்து பட்டியல் இன மக்களுக்கும் இடையூறாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிரிதிவ மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் பட்டாவினை ரத்து செய்வதற்கு இவர் உறுதுணையாக இருந்து வருகிறார் இவர் மீது நடவடிக்கை எடுத்துட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது இதில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் 
 அ.ராஜா மாவட்ட அமைப்பாளர் இரா.சிலம்பரசன் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் கே கே ஏழுமலை சின்னசேலம் நகர செயலாளர் முரளி ஒன்றிய செயலாளர் சீனு நகர செயலாளர் சிலம்பு மற்றும் புரட்சி பாதம் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)