
ரிஷிவந்தியம் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக கட்சியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வசந்தம் கார்த்திகேயன் என்பவர் இந்த ரிஷிவந்தியம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அந்தஸ்தை ஏற்கனவே இரண்டு முறை பெற்று ரிஷிவந்தியம் தொகுதிக்கி தகுதி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் நடந்து முடிந்த 2026 ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த 23/04/2026 அன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் மூன்றாவது முறையாக திமுக கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் 89711.வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த வெற்றி சந்தோசத்தை ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் தொகுதி காங்கிரஸ் வட்டார தலைவர் S. கிருபானந்தம் தலைமையில் 05/05/2026அன்று வெற்றி பெற்ற வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயனுக்கு காங்கிரஸ் சார்பில் பகண்டை X ரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் வடக்கு வட்டார தலைவர் A. அப்பாராசு, வட்டார செயலாளர் வே. அபிலாஷ், நகர தலைவர் A. ராதாகிருஷ்ண, மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி இவ்வேற்றி விழா கொண்டாடப்பட்டது.
மதராச பட்டினம்
S. சிவலிங்கம்.
தீச்சுடர்
செய்தியாளர்





