
Anthropic Claude AI-க்கு Invisible Watermark!
AI உருவாக்கிய தகவலை கண்டுபிடிக்க புதிய முறை! Claude AI-ல் Invisible Watermark அறிமுகம்
AI chatbot நிறுவனமான Anthropic தனது Claude AI உருவாக்கும் உள்ளடக்கத்தில் மறைமுக அடையாளக் குறியீட்டை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் AI உருவாக்கிய text-ஐ கணினி வழியாக அடையாளம் காண உதவும் வகையில் invisible code பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
AI மூலம் உருவாக்கப்படும் கட்டுரைகள், பதிவுகள் மற்றும் பிற உள்ளடக்கங்கள் இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவை மனிதர்களால் எழுதப்பட்டதா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிவது முக்கியமாகியுள்ளது.
ஐரோப்பாவில் AI transparency தொடர்பான விதிமுறைகள் கடுமையடைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

AI-generated content குறித்து வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதே இத்தகைய தொழில்நுட்பங்களின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் பல AI நிறுவனங்களும் இதுபோன்ற அடையாள முறைகளை பயன்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
AI content அதிகரிக்கும் காலத்தில் அதன் உண்மையான மூலத்தை கண்டறியும் தொழில்நுட்பம் செய்தி, கல்வி மற்றும் இணைய பாதுகாப்பு துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கலாம்.



