
சங்கராபுரம்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராக லோகு என்கிற லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்ததைத் தொடர்ந்து, சங்கராபுரத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தில்லை மு. சுரேந்தர் கலந்து கொண்டார். முதலில் சங்கராபுரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேரணியாகச் சென்று, அங்குள்ள டாக்டர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு துணைச் செயலாளர் : பி.சி. சேகர் மற்றும் மாநில அமைப்பு துணைச் செயலாளர் ராகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், மாநில செயற்குழு உறுப்பினர் : வெங்கடாசலம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் : அமு வேலு, உளுந்தூர்பேட்டை மாவட்டச் செயலாளர் : பிரபு, நகரத் தலைவர் : ரவி கலை, நகரச் செயலாளர் : வழக்கறிஞர் ஐயப்பன், நகர பொருளாளர் : ஹரிஹரன், நகர துணைச் செயலாளர் : அப்பாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல் சதீஷ், விஜய், ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வடக்கு மாவட்ட செயலாளராக லோகநாதன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.









