Lifestyleகல்விசெய்திகள்தமிழகம்மாநிலம்

தொடக்கல்வித்துறையில் ஆசிரியர்களின் நலன் சார்ந்த அரசாணை போராட்டத்தில் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது அறிக்கை

தொடக்கல்வித்துறையில் ஆசிரியர்களின் நலன் சார்ந்த அரசாணை 243 எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது – நிறுவனத் தலைவர் – திருவூர் சா.அருணன் – அறிக்கை
~~~~~~~~

IMG 20250717 WA0016 தொடக்கல்வித்துறையில் ஆசிரியர்களின் நலன் சார்ந்த அரசாணை போராட்டத்தில் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது அறிக்கை Theechudar
தொடக்கக்கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்திய அரசாணை 243 னை ரத்து செய்ய தொடக்கக்கல்வித்துறையை சார்ந்த அமைப்புகள் 17.07.2025 மற்றும் 18.07.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தும் சாலை மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது

ஏற்கனவே இருந்த நடைமுறையால் தொடக்கல்வித்துறையில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் சொந்த ஒன்றியத்தில் சொந்த மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெற முடியாத ஒரு சூழலில் தவித்து வந்தனர் பதவி உயர்வு கிடைக்காமல் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர் இந்த நிலையால் ஆசிரியர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்களே என அறிந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆசிரியர்கள் நலன் கருதி அரசாணை 243 னை உருவாக்கி பல ஆண்டுகளாக சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாத ஆசிரியர்கள் சொந்த ஒன்றித்திற்கு செல்ல ஆசிரியர்களை எல்லாம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பணியிட மூப்பு அடிப்படையில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி ஆசிரியர்களை பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள செய்து அவரவர் ஒன்றியம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் பெற்று பணியாற்ற உதவி செய்து மாபெரும் வரலாற்று நிகழ்வை நிகழ்த்தி ஆசிரியர் நலன்காத்தார் அதேபோன்று உபரி ஆசிரியர்கள் கலந்தாய்விலும் மாவட்டத்திற்குள் பணியிட மாறுதல் பெறும் வகையிலும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதிலும் ஓரே ஒன்றியத்தில் அடைப்பட்டு கிடந்த காரணத்தால் பதவி உயர்வு பெறுவதிலும் காலத்தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது பலர் காலத்தாமதத்தால் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்ற சூழல் நிலவியது , 243 அரசாணையால் மாநிலத்தில் வேறு மாவட்டம் வேறு ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடத்தை தேர்வு செய்து பணியாற்றலாம் என்ற பொன்னான ஆசிரியர்களின் தனி நலன் சார்ந்த 243 அரசாணையை எப்படி எதிர்க்க முடியும்

ஒரு சில அமைப்பின் சுய லாபத்திற்காக பல லட்சம் ஆசிரியர்களின் தனி நலன் காக்கும் அரசாணை 243 னை எதிர்த்து போராட்டம் நடத்தும் அமைப்புகளோடு சேர்ந்து எப்படி ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய முடியும் ஆதலால் 17.07.2025 மற்றும் 18.07.2025 ஆகிய தேதிகளில் நடக்கும் சாலை மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கலந்துக் கொள்ளாது

திருவூர்.சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள. ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்