
இந்தியா சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, உழைக்கும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் _மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டக்குழு அலுவலகத்தில்_ கொடியேற்று விழா விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் _தேசியக்கொடியை கட்சியின் மூத்த தலைவர் வி. உதயகுமார் _மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியை வட்ட செயலாளர் எஸ்.கணபதி_ அவர்களும் ஏற்றி வைத்தனர்.
இந்த நிகழ்வில் வட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் _எம்.பழனி, எம்.ராமலிங்கம், சையத் ஜஹாங்கீர், பி.முருகன்_ மற்றும் கட்சியின் கிளைச் செயலாளர்கள் _எம்.ஸ்ரீதர், ஜே.ஆறுமுகம், எம்.செந்தாமரைக்கண்ணன், எம்.எல்லப்பன், எம்.முனுசாமி, என்.செந்தில்முருகன், கே.வீரன், ஜே.பாக்கியம், எம்.ஏழுமலை_ மூத்த தோழர்கள் _எம்.வடிவேல், எம்.பாபு, கே.ஏழுமலை_ இளம் தோழர்கள் _ஏ.பாலச்சந்திரன், தி.ராஜகோபால்_ உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.





