இன்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் பேசும் போது, "தற்கொலைகள் குறித்து நீங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் அது குறித்த தரவுகள் இல்லை என்று பழி போடுகிறீர்கள், இதை அரசே தரவுகள் இல்லாத அரசு தான்,(சிரித்துக் கொண்டே) தரவுகளை சேகரிக்க ஒரு குழு அமைத்து மாநிலங்களிடமிருந்து பெறுமாறு கோரிக்கை விடுக்கிறேன்" என்றார்.
அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் திரு.அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், "தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகள் மாநில அரசுகளால் தான் கொடுக்கப்படுகின்றன. உங்கள் மாநில அரசு சரியான தரவுகளை அளித்திருந்தால், அது இங்கே முறையாக இருந்திருக்கும். அதனால், நம் அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்லியிருக்கிறது, நம் அரசுகளிடையே எப்படி பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வடிவமைத்திருக்கிறது என்று புரிந்து கொண்டு பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு பொறுப்பு வாய்ந்த அவை, மக்கள் அவை, இங்கு சொல்லப்படும் கருத்துகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே இருக்க வேண்டும்" என சிரிக்காமல் பேசி ஒரு புரிதலை ஏற்படுத்தினார். அதையும் மெளனமாக ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டு தலையாட்டினார் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள்.
இது குறித்து பலமுறை நான் தொலைக்காட்சியில் பேசியுள்ளேன். தேசிய குற்ற ஆவணம் என்பது மாநிலங்கள் அளிக்கும் தரவுகளின் தொகுப்பு என்பதும், மத்திய அரசை உள்ளடக்கிய மாநில அரசுகளின் தரவுகளை அப்படியே வெளியிடும் மத்திய அரசு என்று சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் செய்வார்கள் ஒரு சில பங்கேற்பாளர்கள்.
இன்று பாராளுமன்றத்தில் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களின் பொறுமையான விளக்கம் மற்றும் பதில் மிகத் தெளிவானது. அதே போல் ஜோதிமணி அவர்கள் அதை புரிந்து கொண்டு தலையசைத்து ஏற்றுக் கொண்ட விதமும் நன்று. ஆனால், பொது மேடைகளில் இதை எப்படி விமர்சிப்பார்கள் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும், என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில துணைத் தலைவர், நாராயணன் திருப்பதி, பேச்சி
إرسال تعليق
0تعليقات