15-05-2025 அன்று *சர்வதேச சந்தையில் "கிராஷ்" ஆகும் தங்கம்* .. இன்று மாலை சில நிமிடங்களில் விலை குறைந்தது
வாஷிங்டன்: சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக சீராகவே இருந்து வந்தது. ஆனால், இன்று அமெரிக்காவில் ஒரு அறிவிப்பு வெளியான நிலையில், தங்கம் விலை சட்டென சரியத் தொடங்கிவிட்டது. வெறும் சில நிமிடங்களில் தங்கம் விலை 3% வரை குறைந்தது. இதற்கு என்ன காரணம்.. வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதற்கு அவர் கடந்த மாதம் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி முதன்மை காரணமாகும். அவர் ரெசிப்ரோக்கல் வரியைக் குறைத்தாலும் கூட சீனா மீதான வரி தொடரும் என அறிவித்திருந்தார். இதனால் தங்கம் விலை பட்டென உயர்ந்தது.
பறந்த தங்கம் விலை
பதிலுக்கு சீனாவும் வரி போடவே தங்கம் விலை ராக்கெட்டில் பறக்கும் அளவுக்கு உயர்ந்தது. இப்படி இரு நாடுகளும் மாற்றி மாற்றி வரி போட்டதால் வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உச்சத்திற்குப் போனது. கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் கிடைத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில காலமாகவே ஸ்டெடியாகவே இருந்தது. லேசாக இறங்கினாலும் பெரிய இறக்கம் இல்லாமலேயே இருந்தது.
இதற்கிடையே இன்று அமெரிக்காவும் சீனாவும் ரெசிப்ரோக்கல் வரியைக் குறைக்க ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டதால் தங்கம் விலை பட்டென சரிந்தது. இன்று ஒரே நாளில் தங்கம் 3% குறைந்தது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை இந்தளவுக்குக் குறைவது இதுவே முதல்முறையாகும். வர்த்தகப் போர் பதற்றம் குறைந்ததால் டாலர் மதிப்பு உயர்ந்து, தங்கத்திற்கான தேவை குறைந்ததே இதற்குப் பிரதானக் காரணமாகும்.
குறைகிறது
இன்றைய தினம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணியளவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3.1% குறைந்து $3,223.57ஆக இருந்தது.
. கடந்த இது மே 1ம் தேதிக்குப் பிறகு தங்கம் விலை இந்தளவுக்குக் குறைவது இதுவே முதல்முறை. அதேபோல கோல்ட் ப்யூச்சர்ஸ், 3.5% சரிந்து $3,228.80ஆக இருந்தது.
சில நிமிடங்களில் பெரிய வீழ்ச்சி
இன்று காலை ஒரு அவுன்ஸ் 3278 பலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. ஆனால், அமெரிக்கச் சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாகச் செய்தி வெளியான உடனேயே தங்கம் விலை பட்டெனச் சரிந்தது. ஒரு கட்டத்தில் 3178 டாலர் வரையிலும் கூட போனது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் பழையபடி தொடர்ந்தால் தங்கம் விலை மேலும் சரியும் என்றே தெரிகிறது.
இது தொடர்பாக யுபிஎஸ் ஆய்வாளர் ஜியோவானி ஸ்டௌனோவோ கூறுகையில், "சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றங்கள் தணிந்து, 90 நாட்களுக்கு வரிகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வர்த்தகத்திற்கு பாசிட்டிவ் சிக்னல். இதனால் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை குறைகிறது. அதேநேரம் குறுகிய காலத்தில் தங்கம் விலை நிலையற்றதாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதிக வரி விகிதங்கள் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கின்றன" என்றார்.
வர்த்தகப் பதற்றம் சீராகியுள்ளதால் டாலர் மதிப்பும் உயர்ந்து வருகிறது. பொதுவாகவே டாலர் மதிப்பு உயர்ந்தால் தங்கம் விலை குறையும். இதுவும் தங்கம் விலை குறையப் பிரதானக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பொதுவாகச் சர்வதேச சந்தையில் மாலை என்ன நடக்கிறதோ அதுவே நாளை சந்தையில் எதிரொலிக்கும். இதனால், நாளை இந்தியாவிலும் தங்கம் விலை குறையலாம் என சொல்லப்படுகிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
إرسال تعليق
0تعليقات