தமிழகம்செய்திகள்

சிலிண்டர்கள் வெடித்ததில் தரைமட்டமான 42 வீடுகள் – திருப்பூரில் நடந்த சோகம்

திருப்பூர் : Tiruppur திருப்பூரில் 4 சிலிண்டர்கள் வெடித்து, வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த 42 தகரக் கொட்டகைகள் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tiruppur Tragedy Four Gas Cylinders Explode 42 Worker Sheds Destroyed in Shocking Incident

திருப்பூர் மாவட்டம், கல்லூரி சாலை எம்ஜிஆர் நகரில் சாயாதேவிக்குச் சொந்தமான தகரக் கொட்டகைகளில் வட மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் 4 சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன.

இதையும் படியுங்கள் : மாணவியின் உடல் கழிப்பறையில் கண்டெடுப்பு – காவல்துறை விசாரணை! – கோவை PSG மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவம்

இதைக் கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தில், அப்பகுதியில் உள்ள 42 தகரக் கொட்டகைகளும் வெடித்து தரைமட்டமாயின. அந்த தகரக் கொட்டகைகளில் இருந்த அனைத்து பொருட்களும் தீப்பிடித்து எரிந்தன. தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதையும் படியுங்கள் : கடலூர் : இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை.. கேட் கீப்பருக்கும் அதே வேலை! பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டு

அதிர்ஷ்டவசமாக, விபத்து நடந்தபோது அந்த வீடுகளில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்புத் துறையினர் போராடி அங்கு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். திருப்பூரில் சிலிண்டர் வெடித்து 42 தகரக் கொட்டகைகள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்