தமிழகம்செய்திகள்

இரயில் மோதி விபத்தில் பலியான மாணவ_மாணவியருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி….

இரயில் மோதி விபத்தில் பலியான மாணவ_மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் லா. கூடலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கீழத்தேனூர் என்கிற குக்கிராமத்தில் , கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் தனியார் பள்ளி வேன் விபத்தில்  இறந்த 3மாணவ_மாணவியருக்கு ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செய்தனர்.

இதையும் படியுங்கள் : கடலூர் : இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை.. கேட் கீப்பருக்கும் அதே வேலை! பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செல்வப்பெருந்தகை ஆகியோர்களின் வழியில், கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசேலத்தார் பி_எஸ்_ஜெய்கணேஷ் வழிகாட்டுதலின்படி (08-07-2025) அன்று இரவு ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கீழத்தேனூர் கிராமத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில்வே துறையின் மெத்தன போக்கால் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் தனியார் பள்ளி வேன் விபத்து ஏற்பட்டு இறந்த 3மாணவ_ மாணவியர்களுக்கு.

இதையும் படியுங்கள் : மாணவியின் உடல் கழிப்பறையில் கண்டெடுப்பு – காவல்துறை விசாரணை! – கோவை PSG மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவம்

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவருமான  எஸ்_கிருபானந்தம் தலைமையில், வட்டார அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சேரந்தார்கல் S.சிவலிங்கம், கீழத்தேனூர் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் M.கண்ணன் T.சுப்பிரமணி ஆகியோர்கள் முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் R.சாந்தி, K.பூபதி, S.அலமேலு,T.அஞ்சலை, C.பணசெல்வி, J.மீனா,K.சாமாயி, மற்றும் வெ.சந்தோஷ், C.சதாசிவம், G.கமலேஷ்,K.வெற்றி, நந்து ஆகியோர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படியுங்கள் : வெண்டைக்காய் புளிக்குழம்பு 5 நிமிடத்தில் சுவையாக செய்வது எப்படி ?

S. சிவலிங்கம்.
தீச்சுடர் செய்தியாளர்.
ரிஷிவந்தியம்.

Show More
Back to top button
ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்