ரிஷிவந்தியம் ஒன்றியம் காங்கிரஸ் கட்சி சார்பில் பகண்டை கூட்டு சாலையில்
இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,இரும்பு பெண்மணியுமான அன்னை
இந்திராகாந்தியின் 109வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் (19-11-2026) வியாழக்கிழமை அன்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவரான எஸ்_கிருபானந்தம் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கோளாகலமாக கொண்டாடப்பட்டது.
மேலும் இன்னிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்பாராசு, வட்டார துணைத் தலைவர் குப்புசாமி.வட்டார அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சேரந்தாங்கல் சிவலிங்கம்,வட்டார பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணி, ஆகியோர்களின் முன்னிலையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி அனுசுயா, மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வாணாபுரம் கிருஷ்ணமூர்த்தி, அத்தியூர் ராமசாமி, அரியலூர் அண்ணாமலை, கடம்பூர் கோவிந்தன், என பெரும்பாபாலான காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
S. சிவலிங்கம்.
தீச்சுடர், செய்தியாளர்,
ரிஷிவந்தியம்.
8925458693.












