செய்திகள்

புரட்சி பாரத கட்சியின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சியர் மனு

புல்லூர் குறுக்கு ரோடு பகுதியில், புதிய மேம்பாலம் அமைத்து, உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி அருகில் மேம்பாலம் அமைத்து தரக்கோருதல் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகிறது.

இதனால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தும். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்து வருகின்றனர். இதில் குறிப்பாக உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நடைபெற்று வரும் இடமாக அஜிஸ்நகர், புல்லூர் குறுக்கு ரோடு, பாலி, டி. மாவிடந்தல் குறுக்கு ரோடு, ஆசனூர், உள்ளிட்ட இடங்கள் குறிப்பிடத்தக்கது.

இதில் தினந்தோறும் அதிக விபத்துக்கள் நடைபெற்று வரும் இடமான புல்லூர் குறுக்கு ரோடு பகுதியில் இதுவரை மேம்பாலம் அமைக்காததால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. உளுந்தூர் பேட்டை அருகே அதிக விபத்துகள் நடைபெற்று வரும் புல்லூர் ரோடு,

கடலூர் மாவட்டத்தில் இருந்து மங்கலம்பேட்டை வழியாக வரும் வாகனங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டையில் இருந்து வரும் வாகனங்களும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது இந்த விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இருந்தாலும் கிராம சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வாகன ஓட்டுநர்கள் தேசிய நெடுஞ்சாலை என்பது தெரியாமல் குறுக்கு ரோட்டில் தங்களது வாகனத்தை ஓட்டி செல்லும் போது இந்த விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க ஒரே வழி மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதாகும் பொதுமக்கள் உயிரிழப்பை கருத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியிலிருந்து நகராட்சிக்கு செல்லும் வழியில் தொடர் விபத்துக்கள் நடைபெறுவதால் அங்கு மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என புரட்சி பாரதம் கட்சி மாவட்டத்தில் இருந்து மனு அளித்தனர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் புரட்சி பாரதம் கச்சினர் இருந்தனர்

Related Articles

Back to top button
அழகு குறிப்புகள்: முகம் பொலிவாக இருக்க 7 எளிய Skin Care Tips முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி