
கால்நடை மருத்துவப் படிப்புக்கும் NEET வேண்டாம்?
தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் NEET முறையை நீக்க வேண்டும் என முதல்வர் விஜய் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த NEET அடிப்படையிலான முறையை கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும்,
மாணவர்களின் பள்ளிக் கல்வித் திறனை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





