செய்திகள்

சூலை 7 , தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுக்குபுகழ் வணக்கம்…………………….

ஜூலை 7, 2025 இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 166 வது பிறந்தநாள்:

 

முதல் தலித் சட்டமன்ற உறுப்பினரான இரட்டைமலை_சீனிவாசன் அவர்கள் ஜீலை 7, 1859 ஆம் ஆண்டு பழைய செங்கல்பட்டு மாவட்டம் #மதுராந்தகதிற்கு அருகில் உள்ள #கோழியாளம் என்னும் சிற்றுரில் பிறந்தார்,வழக்கறிஞரான இவர் மேலும் அரசியல்வாதியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்டு வந்தார்….

1891 ஆண்டு பறையர் மகாசன சபையை தோற்றுவித்தார். இது 1892 ஆம் ஆண்டு ஆதிதிராவிட மகாசன சபை என பெயர் மாற்றினார். மற்றும் பறையன் என்ற திங்கள் இதழையும் நடத்தி வந்தார். 1923-1939 சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தார்…

 

முதல் தலித் சட்டமன்ற உறுப்பினர் இவர் தான், சாதி கொடுமையால் தஞ்சை, கோயம்புத்துர் போன்ற பல்வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்து சாதி கொடுமைகளுக்கு எதிராக போராடி வந்தார்….தாழ்த்தப்பட்ட மக்களின் தலை நிமிர்வுக்காக பாடுப்பட்ட தலைவர்களுக்கு தலை வணங்குவோம்..!

Related Articles

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்