
போராட்ட களத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கொண்டாடிய காமராஜர் பிறந்த நாள் விழா
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு….
பகுதிநேர ஆசிரியர்கள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் கர்ம வீரர் காமராஜர் படம் வரைந்து மரியாதை செலுத்தினார்கள்.
தன் கலைத்திறனை தன் விரலினால் கோலமிட்ட பகுதி நேர ஓவிய ஆசிரியர்களின் சிறப்புமிக்க திறமைக்கு தலை வணங்குகிறோம்…
இவர்கள் ஓவியத்தை வரைபவர்கள் மட்டுமல்ல …
ஓவியத்தையே பேச வைத்திருக்கிறார்கள்… அவர்களின் எண்ணற்ற திறமையால்…
கர்மவீரரே நமக்காக வந்து கேட்கின்றார்… என்னாச்சு…என்னாச்சு 181 என்னாச்சு….
கல்வியின் வளர்ச்சியை நிலை நிறுத்தியவர்…
மாணவர்களுக்காக…
பகுதி நேர ஆசிரியர் பணி நிரந்தரம் பெற வேண்டும் என்று எண்ண மாட்டாரா என்ன….?
கர்மவீரர் காமராஜரின் எண்ணம் நிறைவேற வேண்டும்..
அனைவரும் பணி நிரந்தரம் அடைய வேண்டும்…
என்று இந்த கல்வி வளர்ச்சி நாளில் சபதம் எடுப்போம்….
மாபெரும் வெற்றியை நோக்கி பயணிப்போம்….

டீ டம்ளரின் பின்புற பகுதியில் கர்மவீரர் காமராஜர்…
கேட்கின்றார் என்ன ஆச்சு என்னாச்சு 181 என்ன ஆச்சு?
டம்ளரின் இடம் சிறிது தான் இருந்தாலும் எறும்பை போல் செயல்படுபவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள்….
ஓவியம் வரைந்தவர்….
பகுதி நேர ஓவிய ஆசிரியர் ஜெயபால் அவர்கள்… செங்கல்பட்டு மாவட்டம்…
பாராட்டுதலும் நன்றிகளும் அனைத்து பகுதி நேர ஆசிரியரின் சார்பாக…
ஆசிரியருக்கு கொடுக்கப்படும் ஊதியம் விதை நெல் போன்றது….
வி தை நெல்லுக்கு கணக்கு பார்த்தால்
விளைச்சல் இருக்காது….
என்பதை உணர்ந்திடு… உணர்ந்திடு…
அரசே நீ பணி நிரந்தரம் செய்திடு செய்திடு.. என பகுதி நேர ஆசிரியர்கள் முழக்கம் செய்தார்கள்.





