செய்திகள்தமிழகம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி  

 

 

       கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி உட்கோட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விக்கி @ செந்தில்குமார் த/பெ மலையன் என்பவர் கடந்த 06.06.2025 அன்று கச்சிராயபாளையம் காவல் நிலையத்திற்கு வந்த போது ஏற்பட்ட நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் 04.07.2025 அன்று வெளியாகியுள்ளது.

 

இதுசம்மந்தமாக கச்சிராயபாளையம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு.மணிகண்டன் என்பவரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வில் தொடர்புடைய மற்ற காவலர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சமூக ஊடகப்பிரிவு, கள்ளக்குறிச்சி மாவட்டம்.

Related Articles

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்