
சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் இன்று முதல் கட்டணம் இல்லை
மாநகராட்சி PARKING-ல் கட்டணம் இல்லை.
சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் இன்று முதல் எந்த கட்டணமும் இல்லாமல் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
கட்டண வசூலுக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்துடன் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் வாகனங்களை நிறுத்தலாம் என மாநகராட்சி அறிவிப்பு.





