செய்திகள்தமிழகம்

கீழத்தேனூர் கிராமத்தில் திடீர் தீ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வசந்தம் கார்த்திகேயன் MLA நிதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் லா. கூடலூர் பஞ்சாயத்து கீழத்தேனூர் கிராமத்தில் வசிக்கும் திடீர் தீ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வசந்தம் கார்த்திகேயன் MLA நிதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் லா. கூடலூர் பஞ்சாயத்து கீழத்தேனூர் கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் மகன் பரதன் என்பவர் தனது குடும்பத்துடன் அவரது கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது கூரை வீட்டில் எதிர் பாராத விதமாக 20/12/2025அன்று திடீர் தீ பரவியது.இதனை கண்டறிந்து பொது மக்கள் வீட்டின் கூரைகளை அணைக்க கையில் கிடைத்த பாத்திரங்களை கொண்டு தண்ணீர் ஊற்றி அணைக்க முழற்சி செய்தும் இந்த தீ வீட்டின் கூரை முழுவதும் எறிந்து சாம்பலானது.

இதனால் வீட்டின் உள் இருந்த தானிய வகை, வீட்டுக்கு உபயோக பொருட்கள், மற்றும் பீரோ, பாத்திரங்கள், ஆடைகள் அனைத்தும் கருகி காணப்பட்டது. இதனால் வீட்டின் உரிமையாளர் பரதன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் செய்வது அறியாமல் தவித்துகொண்டிருந்தனர்.

இவர்களுக்கு உதவி புரிய லா. கூடலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் துளசி இந்த சம்பவம் அறிந்து ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், மற்றும் வாணாபுரம் வட்டாச்சியர் வெங்கடேசன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர், ஆகியோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் MLA, நிதி வழங்கி ஆறுதல் கூறினார், மேலும் வானாபுரம் வட்டாச்சியர் வெங்கடேசன் நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும் கிராம பொது மக்கள் பொது மக்களோடு பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் துளசி மற்றும் பஞ்சாயத்து எழுத்தாளர் சண்முகம் ஆகியோறும் ஆறுதல் கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

S. சிவலிங்கம்.
தீச்சுடர் நிருபர்.
ரிஷிவந்தியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்