விளையாட்டு

TNPL 2025 : டிஎன்பிஎல் 2025 திண்டுக்கல் அணிக்கு 141 ரன்கள் இலக்குகள் நிர்ணயித்தது திருச்சி அணி.

TNPL 2025: டிஎன்பிஎல் 2025 தொடரின் இன்றிரவு நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று பேட்டிங் செய்ய திண்டுக்கல் அணி தேர்வு செய்தது.

TNPL 2025: அதன்படி, திருச்சி அணியின் தொடக்க வீரர்களாக வாசிம் அகமது மற்றும் ஜெயராமன் சுரேஷ் களமிறங்கினர். பவர்பிளேயில் இருவரும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெயராமன் சுரேஷ் 17 பந்துகளில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கௌஷிக் 9 ரன்களுக்கும், சஞ்சய் யாதவ் 1 ரன்களுக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜ்குமார் 0 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாசிம் 41 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

இதன் பிறகு வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் விளைவாக, திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது.

திண்டுக்கல் அணிக்காக, அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், பெரியசாமி மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

TNPL 2025: Trichy team sets a target of 141 runs for Dindigul team.

Related Articles

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்