
தயிர் சாதம் – மதிய உணவின் இறுதி டச்!
தயிர் சாதம் செய்வது எப்படி? ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே ஈஸியான ரெசிபி
வேகவைத்த சாதத்தை நன்றாக மசித்து சிறிது பால் சேர்த்து மென்மையாக கலக்கவும்.
சாதம் ஆறிய பிறகு தேவையான அளவு தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
தாளிக்க சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
விருப்பப்பட்டால் சிறிது இஞ்சி மற்றும் பெருங்காயமும் சேர்க்கலாம்.
இந்த தாளிப்பை தயிர் சாதத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும்.
மேலே கொத்தமல்லி தூவி பரிமாறலாம். மாதுளை அல்லது திராட்சை போன்றவற்றை சிறிதளவு சேர்த்தாலும் சுவை மாறுபடும்.
சாம்பார் சாதம் அல்லது காரமான உணவுக்குப் பிறகு தயிர் சாதம் ஒரு எளிய நிறைவு உணவாக இருக்கும்.





